பட்டியலின மக்களுக்கு திருமாவளவன் மிகப்பெரிய துரோகம் இழைக்கிறார் - மத்திய இணை மந்திரி எல்.முருகன்
தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காகப் பட்டியலின மக்களின் நலன்களை திருமாவளவன் பலி கொடுத்து வருகிறார் என்று எல்.முருகன் கூறியுள்ளார்.;
பட்டியலின மக்களுக்கு திருமாவளவன் மிகப்பெரிய துரோகம் இழைக்கிறார் - மத்திய இணை மந்திரி எல்.முருகன்
சென்னையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பட்டியலின மக்களின் நலனில் திருமாவளவனுக்கு சிறிதும் அக்கறை இல்லை. திமுகவை எதிர்த்துக் கேள்வி கேட்டால், கூட்டணியில் இருந்து விலக நேரிடும் என திருமாவளவன் பயப்படுகிறார். இதுவே அவரது அரசியல் மவுனத்திற்குக் காரணம். பட்டியலின மக்களின் நலனுக்காக உண்மையிலேயே பாடுபடுவதாகக் கூறும் திருமாவளவன், அந்த மக்களின் உரிமைகளுக்கு எதிராக திமுக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்த்துப் பேசாமல் இருக்கிறார்.
இது, பட்டியலின மக்களுக்கு இழைக்கப்படும் மிகப் பெரிய துரோகம். திருமாவளவன், தனது தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காகப் பட்டியலின மக்களின் நலன்களைப் பலி கொடுத்து வருகிறார். அவர் சமூக நீதிக்காகப் போராடுவதாகக் கூறுவது வெற்று முழக்கம்.
நடப்பு நிதியாண்டில் மட்டும் தமிழகத்திற்கு ரூ.6,500 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் வெறும் ரூ.879 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ரூ.800 கோடி செலவில் எழும்பூர் ரெயில் நிலையம் புதுப்பொலிவுடன், விமான நிலையத்திற்கு இணையாக தயாராகி வருகிறது.
எங்கள் கூட்டணி வலிமையான கூட்டணி. 2026-ம் ஆண்டில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க போகின்ற கூட்டணி. திமுகவின் கூட்டணி படுதோல்வி அடைய போகிறது. திமுகவில் இருந்து முக்கியமான ஆட்கள் வெளியே வருவதற்கு தயாராக இருக்கின்றனர். பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. பொறுத்திருந்து பாருங்கள். திமுகவில் இருந்து மிகப்பெரிய தலைவர்கள் எங்களிடம் வந்து இணைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Yasmin fathima

