கச்சா எண்ணெய் விவகாரத்தில் இரட்டை வேடம்: அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மீது இந்தியா விமர்சனம்

கச்சா எண்ணெய் விவகாரத்தில் இரட்டை வேடம்: அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மீது இந்தியா விமர்சனம்
கச்சா எண்ணெய் விவகாரத்தில் இரட்டை வேடம்: அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மீது இந்தியா விமர்சனம்

புதுடெல்லி: ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் இந்​திய பொருட்​களுக்கு 25 சதவீத வரி விதிக்​கப்​படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஏற்​கெனவே அறி​வித்​திருந்தார். இந்த வரியை மேலும் உயர்த்​து​வேன் என்று நேற்று முன்தினம் அறிவித்தார்.

இதுதொடர்​பாக மத்​திய வெளி​யுறவு அமைச்​சகம் நேற்று முன்​தினம் இரவு வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதற்​காக அமெரிக்கா​வும் ஐரோப்​பிய ஒன்​றிய​மும் இந்​தி​யாவை தொடர்ந்து குறி வைத்து வரு​கின்​றன. இந்​தி​யா​வுக்கு கச்சா எண்​ணெய் விநி​யோகம் செய்து வந்த நாடு​கள், உக்​ரைன் போருக்கு பிறகு ஐரோப்​பிய நாடு​களுக்கு கச்சா எண்​ணெய் விநி​யோகிக்க தொடங்​கி​விட்​டன.

அந்த இக்​கட்​டான நேரத்​தில் ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெயை இறக்​குமதி செய்​தோம். இதற்கு அமெரிக்கா​வும் ஆதரவு அளித்​தது. சர்​வ​தேச சந்​தை​யில் கச்சா எண்​ணெய் விலை உயர்வை தடுக்க இந்​தி​யா​வுக்கு ஆதரவு அளிப்​ப​தாக அமெரிக்கா கூறியது. இந்த விவ​காரத்​தில் இந்​தியா மீது குற்​றம் சுமத்​தும் நாடு​கள் ரஷ்​யா​வுடன் தொடர்ந்து வர்த்​தகத்​தில் ஈடு​பட்டு வரு​கின்றன.

கடந்த 2023-ம் ஆண்​டில் ஐரோப்​பிய ஒன்​றி​யம், ரஷ்​யா​வுடன் 17.2 பில்​லியன் யூரோ, கடந்த 2024-ம் ஆண்​டில் 67.5 பில்​லியன் யூரோ மதிப்​பில் இருதரப்பு வர்த்​தகத்​தில் ஈடு​பட்​டிருக்​கிறது. இந்த சூழலில் ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் இறக்​குமதி செய்​வ​தாக இந்​தியா மீது குற்​றம் சாட்​டு​வது நியாயமற்​றது, ஏற்​றுக் கொள்ள முடி​யாதது. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இரட்டை வேடம் போடுகின்றன. நாட்​டின் நலன் மற்​றும் பொருளா​தார பாது​காப்பை உறுதி செய்ய தேவை​யான அனைத்து நடவடிக்​கைகளை​யும் இந்​தியா மேற்​கொள்​ளும். இவ்​வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.