கடந்த 40 ஆண்டுகளாக பணத்தை மதிக்காமல் இருந்தேன் : நடிகர் சசிகுமார்
டூரிஸ்ட் பேமிலி' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சசிகுமார் நடித்துள்ள 'பிரீடம்' என்ற படம் இன்று திரைக்கு வருவதாக இருந்து ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் இருந்தபோது அவர் அளித்த ஒரு பேட்டி வைரலாகி வருகிறது. அதில், ''மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த 'தளபதி' படத்தில் ஒரு காட்சியில் ரத்தம் கொடுத்துவிட்டு பணம் கொடுக்கும் போது, அவர்கள் நன்றி சொல்வார்கள். அப்போது ரஜினி வெறும் பணம் தானே என்று சொல்லுவார்.

இதுபோன்று பலர் சொல்வதைக்கேட்டு நானும் பணத்தை மதிக்காமல்தான் இருந்தேன். அதனால்தான் கடந்த 40 ஆண்டுகளாக அந்த பணம் என்னை மதிக்காமல் இருந்தது. ஆனால் இப்போது பணத்தை பற்றி புரிந்து கொண்டேன். அதை மதிக்கவும் தெரிந்து கொண்டேன். இப்படி நான் மதிக்கத் தொடங்கிய பிறகுதான் இப்போது பணமும் என்னை மதிக்க தொடங்கி இருக்கிறது'' என்று கூறியுள்ளார் நடிகர் சசிகுமார்.


Yasmin fathima

