ஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பி வழியும் அடவிநயினார் அணை
தென்காசி,
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது. 132 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணை பகுதிகளில் பெய்த பலத்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்த அணை ஏற்கனவே 2 முறை நிரம்பி இருந்த நிலையில் நேற்று 3-வது முறையாக நிரம்பி வழிந்தது.

அணைக்கு வினாடிக்கு வரும் 70 கன அடி தண்ணீரும் அப்படியே அனுமன்நதியில் வெளியேற்றப்படுகிறது. எனவே ஆற்றின் கரையோரம் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும், ஆற்றில் இறங்கி குளிக்கக்கூடாது எனவும் பொதுப்பணித்துறை சார்பில் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையால் ஒரே ஆண்டில் அடவிநயினார் அணை 3-வது முறையாக நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Yasmin fathima

