திருவண்ணாமலையில் இன்று எடப்பாடி பழனிசாமி விவசாயிகள், வியாபாரிகளுடன் கலந்துரையாடல்

திருவண்ணாமலையில் இன்று எடப்பாடி பழனிசாமி விவசாயிகள், வியாபாரிகளுடன் கலந்துரையாடல்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு மருத்துவ உபகரணங்களை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சென்றார்.

செய்யாறு, வந்தவாசி, ஆரணி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் திரளாக கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் நடுவில் நின்று பேசினார். இதனை தொடர்ந்து திருவண்ணாமலை சென்றார். அங்குள்ள ஓட்டலில் இரவு தங்கினார். இன்று காலை தண்டராம்பட்டு பகுதியில் இருந்து மாற்றுக்கட்சிகளை சேர்ந்தவர்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

மேலும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு மருத்துவ உபகரணங்களை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இதனை தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள் வர்த்தக அமைப்புகளை சேர்ந்த வியாபாரிகளுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.

இன்று மாலை 4 மணிக்கு செங்கத்தில் சுற்றுப்பயணம் செய்து பேசுகிறார். அதனைத் தொடர்ந்து கீழ்பென்னாத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்து மக்கள் மத்தியில் பேசுகிறார்.

எடப்பாடி பழனிசாமி வருகையொட்டி திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்தூர் பகுதிகளில் அ.தி.மு.க.வினர் கட்சி கொடிகளுடன் வரவேற்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசக்கூடிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது