திசையன்விளை-எலைட் ரோட்டரி கிளப்,ரெக்ட் கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்திய "போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு" பேரணி.

"Drug Prevention Awareness" rally organized by students of Vektarvlai-Elite Rotary Club, Rect College.

திசையன்விளை-எலைட் ரோட்டரி கிளப்,ரெக்ட் கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்திய "போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு" பேரணி.

திசையன்விளையில்  திசையன்விளை-எலைட் ரோட்டரி கிளப்,ரெக்ட் கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்திய "போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு" பேரணி. 
காவல்துறை,வருவாய் துறை பங்கேற்பு.
திசையன்விளை. ஆக.12

இந்திய சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டை  முன்னிட்டு  தமிழகத்தை போதை பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதோடு அனைத்து துறை அரசு அதிகாரிகளையும் தமிழக முதல்வர் கலந்து ஆலோசித்து போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்கும் வகையில் அதிரடி நடவடிக்கைகளை எடுப்பதற்கு கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் திசையன்விளையில் தமிழக காவல்துறை மற்றும் வருவாய் துறை , திசையன்விளை-எலைட் ரோட்டரி கிளப் மற்றும் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள்  இணைந்து  போதை பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

இப்ப பேரணியில் திசையன்விளை தாசில்தார் செல்வகுமார், வள்ளியூர் உட்கோட்டை டிஎஸ்பி யோகேஷ் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

முன்னதாக திசையன்விளை பேருந்து நிலையத்தில் பேரணி தொடங்கும் முன்பு திசையன்விளை தாசில்தார் செல்வகுமார் தலைமையில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

பின்னர் திசையன்விளை காமராஜர் பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி, உடன்குடி ரோடு, நேருஜி திடல், மன்னராஜா கோவில், பேரூராட்சி அலுவலகம், நகைக்கடை பஜார் ,தெற்கு பஜார், காமராஜர் சிலைசந்திப்பு  வழியே மீண்டும் பேருந்து நிலையத்தை வந்து அடைந்தது. பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் இந்திய தேசிய கொடிகளையும்   போதை ஒழிப்பு மற்றும் தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும்  கைகளில் ஏந்தியவாறு பேரணியில் ஈடுபட்டனர்.நிகழ்ச்சி யில் திசையன்விளை காவல் ஆய்வாளர் ஜமால்,,திசையன்விளை எலைட் ரோட்டரி கிளப் தலைவர் பாலகிருஷ்ணன்,முன்னாள் தலைவர் சாந்தகுமார், செயலாளர் ரமேஷ் குமார் பொருளாளர் சிவகுரு ,ரோட்டரி உறுப்பினர் கள் மற்றும் கல்லூரி ஆசிரியர் கள் கலந்து கொண்டனர்.
படவிளக்கம்.
திசையன்விளை யில் ரோட்டரி கிளப்,ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரி,காவல்துறை, வருவாய் துறை ஆகியோர் இணைந்து போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.