எஸ்.பி.ஐ., சென்னை மண்டலத்துக்கு புதிய தலைமை பொது மேலாளர்

எஸ்.பி.ஐ., சென்னை மண்டலத்துக்கு புதிய தலைமை பொது மேலாளர்
புதுச்சேரியின் 1,282 எஸ்.பி.ஐ., கிளைகள் மற்றும் 4.80 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகத்தை சென்னை மண்டலம் கவனித்து வருகிறது.

சென்னை :நாட்டின் மிகப் பெரிய வங்கியான, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின், சென்னை மண்டல தலைமை பொது மேலாளராக விவேகானந்த் சவுபே பொறுப்பேற்றுள்ளார்.

தமிழகம், புதுச்சேரியின் 1,282 எஸ்.பி.ஐ., கிளைகள் மற்றும் 4.80 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகத்தை சென்னை மண்டலம் கவனித்து வருகிறது. அதன் தலைமை பொது மேலாளராகியுள்ள சவுபே, வங்கித் துறையில் 27 ஆண்டு கால அனுபவம் பெற்றவர்.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வங்கியின் பல்வேறு தலைமைப் பதவிகளை வகித்தவர். பிரிட்டனில் என்.ஆர்.ஐ., சில்லரை வணிக பிரிவுக்கு தலைமை தாங்கியுள்ளார்.

வங்கித் தலைவரின் சிறப்பு செயலராகவும், நிர்வாக செயலராகவும் பணியாற்றியுள்ளார்.

வணிகவியல் பட்டதாரியான விவேகானந்த் சவுபே, முதலீடு, கிளை நிர்வாகம், சிறுதொழில் கடன் உள்ளிட்டவற்றில் பல்வேறு சான்றிதழ்களை பெற்றுள்ளார்.