பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோக்கள் உள்ள இணையதளங்களை முடக்கவும் - மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோக்கள் உள்ள இணையதளங்களை முடக்கவும் - மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
தன்னுடைய கல்லூரி காலத்தில் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் பரப்பப்பட்டதாகக் கூறி, சம்பந்தப்பட்ட பெண் வழக்கறிஞர், அவற்றை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்

பெண் வழக்கறிஞர் ஒருவரின் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய அனைத்து இணையதளங்களையும் உடனடியாக முடக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோக்கள் உள்ள இணையதளங்களை முடக்கவும் - மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தன்னுடைய கல்லூரி காலத்தில் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் பரப்பப்பட்டதாகக் கூறி, சம்பந்தப்பட்ட பெண் வழக்கறிஞர், அவற்றை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

பெண் வழக்கறிஞர் ஒருவரின் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய அனைத்து இணையதளங்களையும் உடனடியாக முடக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (11.07.2025) உத்தரவிட்டுள்ளது.

தன்னுடைய கல்லூரி காலத்தில் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் பரப்பப்பட்டதாகக் கூறி, சம்பந்தப்பட்ட பெண் வழக்கறிஞர், அவற்றை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 70-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் பகிரப்பட்டுள்ள அந்தக் காட்சிகளை 48 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடந்த 9-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், வீடியோக்களை இணையதளங்களில் இருந்து முழுமையாக நீக்க இயலாது என மத்திய அரசு தரப்பில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் முறையீடு செய்யப்பட்டது. மேலும், பெண் வழக்கறிஞர் தொடர்பான வீடியோ காட்சிகளை நீக்க சமூக வலைத்தளங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்த நீதிபதி, பெண் வழக்கறிஞர் தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் இடம்பெற்றுள்ள அனைத்து இணையதளங்களையும் முடக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மீண்டும் உத்தரவிட்டார். இந்த உத்தரவு இணையதளங்களில் தனிப்பட்ட நபர்களின் தனியுரிமை மீறல்களைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.