அரசு பஸ்களில் 'அருணாசலம்' என்பது மீண்டும் திருவண்ணாமலை என மாற்றம்

அரசு பஸ்களில் 'அருணாசலம்' என்பது மீண்டும் திருவண்ணாமலை என மாற்றம்
திருவண்ணாமலை பஸ்களில் அதன் பெயர் அருணாசலம் என்று மாற்றி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.;

சென்னை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தின் கீழ் இயங்கும் பஸ்களில் திருவண்ணாமலை பஸ்களில் அதன் பெயர் அருணாசலம் என்று மாற்றி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் அளித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், ''இதை எங்கள் கவனத்திற்குக் கொண்டுவந்ததற்கு நன்றி. வழித்தடப் பலகையின் பெயர் இப்போது 'திருவண்ணாமலை' என்று திருத்தப்பட்டுள்ளது.

திருவண்ணாமலைக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து இயக்கப்படும் அனைத்து பஸ்களிலும் ஒரே மாதிரியான பெயர்களை உறுதி செய்ய அனைத்து பணிமனைகளுக்கும் கடுமையான அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன'' என தெரிவிக்கப்பட்டுள்ளது