பெங்களூருவில் பெண்களை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டவர் கைது - சட்டம் என்ன சொல்கிறது?
பெங்களூருவின் பரபரப்பான தெருக்களில் செல்லும் பெண்களை, அவர்களின் அனுமதியின்றி வீடியோ பதிவு செய்து அவற்றை சமூக ஊடகங்களில் வெளியிட்ட குர்தீப் சிங் என்ற இளைஞரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர்.

தனது அனுமதியின்றி 'மிகவும் தகாத முறையில் தன்னை வீடியோ பதிவு செய்துள்ளனர்', அதைத் தொடர்ந்து 'ஆபாசமான செய்திகள்' வரத் தொடங்கின என்று ஒரு பெண் தனது சமூக ஊடகப் பதிவில் பதிவிட்டு, அதில் காவல்துறையினரை டேக் செய்தார்.
இந்தநிலையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட பெண்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பெங்களூருவில் பெண்களின் அனுமதியின்றி வீடியோக்களை பதிவேற்றும் போக்கு நீண்டகாலமாக தொடர்கிறது.
ஆறு வாரங்களுக்கு முன்பு, பெங்களூரு மெட்ரோவில் பயணிக்கும் இளம் பெண்களின் படங்களை எடுத்து @MetroChicks என்ற சமூக ஊடக தளத்தில் பதிவேற்றியதற்காக தனியார் நிறுவனத்தின் கணக்காளர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இரண்டு வீடியோக்களிலும், வீடியோவை உருவாக்கும் முறை ஒரே மாதிரியாக இருந்தது.
மாலை நேரத்தில் சாலையில் நடந்து செல்லும் பெண்கள், விருந்துக்குச் செல்லும் உடைகளை அணிந்திருந்தனர். இரண்டு சந்தர்ப்பங்களிலும் எடுக்கப்பட்ட வீடியோக்களிலும் எந்த வித்தியாசமும் இல்லை." என்றார்
பெண்கள் நல ஆர்வலர் மற்றும் குளோபல் கன்சர்ன்ஸ் இண்டியா என்ற அமைப்பைச் சேர்ந்தவருமான பிருந்தா அடிகே இதனை "பெண்கள் விரோத சிந்தனையுடன் கூடிய சிதைந்த மனநிலை கொண்ட ஆணாதிக்கத்தின்" வெளிப்பாடு என்று விவரித்தார்.

கைது செய்யப்பட்டவர்
தனது அனுமதியின்றி தன்னை வீடியோ எடுத்து வெளியிட்ட நபரை அந்த பெண் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவருக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.
"நான் பல கணக்குகள் மூலம் அந்தப் பதிவு பற்றி புகாரளிக்க முயற்சித்தேன். ஆனால் அந்தப் பதிவு சமூக ஊடக வழிகாட்டுதல்களுக்கு எதிராக இல்லை என பதில் கிடைத்தது." என்று அந்தப் பெண் கூறினார்.
இந்த வீடியோவால் அவரது கணக்கை பார்ப்பவர்களின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் கூடிக் கொண்டே சென்றதைக் கண்டபோது அவரது பிரச்னைகள் மேலும் அதிகரித்தன. அவரது கணக்கை மக்கள் இணையத்தில் தேடினார்கள்.
"எனக்கு ஆபாசமான செய்திகள் வர ஆரம்பித்தன," என்று அவர் கூறினார்.
தன்னைப் போலவே பல பெண்களுக்கும் நடக்கிறது என்று கூறும் பாதிக்கப்பட்டப் பெண், அவர்களுக்குத் தங்கள் வீடியோக்கள் ரகசியமாக உருவாக்கப்பட்டவை என்பது கூடத் தெரியாது என்றும் கூறினார்.
"அந்தக் கணக்கை பத்தாயிரம் பேர் பின்தொடர்கின்றனர். சமூக ஊடகங்களில் இதெல்லாம் சாதாரண விஷயமாக இருக்கக்கூடாது. நாம் குரல் எழுப்ப வேண்டும்" என்று பாதிக்கப்பட்ட பெண் கூறுகிறார்



