செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 7 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்: 27.63 லட்சம் குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சல் தடுப்பூசி

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 7 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்: 27.63 லட்சம் குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சல் தடுப்பூசி
ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி திட்டத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 7 மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்து தொடங்கி வைத்தார். துறை செயலாளர் ப.செந்தில்குமார், மத்திய வட்டார துணை ஆணையர் எச்.ஆர்.கௌசிக், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை இயக்குநர் சோமசுந்தரம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் சித்ரா, நிலைக் குழுத் தலைவர் (சுகாதாரம்) கோ.சாந்தகுமாரி, இணை இயக்குநர் வினய், மாநகர நல அலுவலர் ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை: ஜப்​பானிய மூளைக் காய்ச்​சல் தடுப்​பூசி திட்​டம் 7 மாவட்​டங்​களுக்கு விரி​வாக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளது. 27.63 லட்​சம் குழந்​தைகளுக்கு தடுப்​பூசி செலுத்​தும் பணியை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தொடங்கி வைத்​தார். தமிழகத்​தில் விருதுநகர், விழுப்​புரம், கள்​ளக்​குறிச்​சி, திருச்​சி, திரு​வாரூர், மதுரை, பெரம்​பலூர், அரியலூர், தஞ்​சாவூர், திரு​வண்​ணா​மலை, திரு​வள்​ளூர், புதுக்​கோட்​டை, கரூர் மாவட்​டங்​களி​லும், சென்​னை​யில் 2 மண்​டலங்​களி​லும் மூளைக் காய்ச்​சல் தடுப்​பூசி திட்​டம் கடந்த 2007-ம் ஆண்டு முதல் செயல்​பாட்​டில் உள்​ளது.

இந்​நிலை​யில், சென்​னை​யில் இதர 13 மண்​டலங்​களி​லும், புதி​தாக செங்​கல்​பட்​டு, காஞ்​சிபுரம், திருநெல்​வேலி, தென்​காசி, நாகப்​பட்​டினம், வேலூர் என மொத்​தம் 7 மாவட்​டங்​களுக்கு இந்த திட்​டம் தற்​போது விரி​வாக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த விரி​வாக்​கத் திட்​டத்தை சென்னை ஷெனாய் நகர் பெண்​கள் மேல்​நிலைப் பள்​ளி​யில் சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் நேற்று தொடங்கி வைத்​தார்.

அப்​போது, செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: நாடு தழு​விய தடுப்​பூசி திட்​டத்​தில், 12 வகை​யான நோய் பாதிப்​பு​களை தடுப்​ப​தற்கு 11 வகை​யான தடுப்​பூசிகள் தமிழகத்​தில் தொடர்ச்​சி​யாக வழங்​கப்​பட்டு வரு​கிறது. அதில், மூளைக் காய்ச்​சல் எனப்​படும் ஜப்​பானிய மூளைக் காய்ச்​சல் சில வகை​யான கியூலெக்ஸ் கொசுக்​களால் பரவும் ஒரு வைரஸ் நோய்.

இது மத்​தியநரம்பு மண்​டலத்தை பாதித்​து, கடுமை​யான சிக்​கல்​கள், வலி பாதிப்​பு​கள், சில நேரங்​களில் உயி​ரிழப்​பை​யும் ஏற்​படுத்​துகிறது. இதில் உயிர் பிழைத்​தவர்​கள்​கூட அதிக அளவில் நரம்​பியல் விளைவு​களால் பாதிக்​கப்​படு​கின்​றனர்.

இயற்கை தொற்று காரண​மாக எதிர்ப்பு சக்தி இல்​லாத குழந்​தைகளை கண்​டறிந்​து, அவர்​கள் அதி​கம் உள்ள மாவட்​டங்​களில் இந்த தடுப்​பூசி போடப்​படு​கிறது. தற்​போது தொடங்​கப்​பட்​டுள்ள விரி​வாக்​கத் திட்​டத்​தில் 27.63 லட்​சம் குழந்​தைகளுக்கு மூளைக் காய்ச்​சல் தடுப்​பூசி ஒரு டோஸ் வழங்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டு உள்​ளது

5-15 வயது குழந்​தைகளுக்கு அரசு மற்​றும் அரசு உதவி பெறும் பள்​ளி​களி​லும் (ஆக.13 முதல் செப்​. 12 வரை), 1-5 வயது குழந்​தைகள், பள்​ளி​யில் இருந்து இடைநிற்​றலான குழந்​தைகளுக்கு அங்​கன்​வாடி மையங்​களி​லும் (செப்​.13 முதல் அக்​.12 வரை), 1-15 வயது வரையி​லான அனைத்து குழந்​தைகளுக்கு ஆதர​வற்ற குழந்​தைகள் காப்​பகம், சிறு​வர் சீர்​திருத்த பள்​ளி​களி​லும் (அக்​.13 முதல் நவ.12 வரை) திங்​கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்​களில் அதிகபட்​சம் 12 நாட்​கள் நடை​பெறும் முகாம்​களில் இலவச​மாக தடுப்​பூசி போடப்​படும். விடு​பட்ட குழந்​தைகளுக்கு தனி​யாக ஒரு வாரம் தடுப்​பூசி போடப்​படும்.

இவ்​வாறு அவர் கூறி​னார். சுகா​தா​ரத் துறை செயலர் செந்​தில்​கு​மார், பொது சுகா​தா​ரம், நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்​குநர் சோமசுந்​தரம், மருத்​து​வம், ஊரக நலப் பணி​கள் இயக்குநர் சித்ரா உள்​ளிட்​டோர் உடன் இருந்​தனர்.