எடப்பாடி பழனிசாமியின் 23ஆம் தேதி சுற்றுப் பயணம் ஒத்திவைப்பு..!
மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் 3ஆம் கட்ட சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளார்.
சோழிங்கநல்லூர், திருப்போரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மேற்கொள்ள இருந்த சுற்றுப் பயணத் திட்டம் ஒத்திவைப்பு.
அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, கடந்த 7.7.2025 முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரச்சார சூறாவளி
சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், மூன்றாம் கட்ட சுற்றுப் பயணத் திட்டத்தில், வருகிற 23ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று சோழிங்கநல்லூர், திருப்போரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மேற்கொள்ள இருந்த சுற்றுப் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Yasmin fathima

