முகநூலில் நட்பாக பழகிய 4 பெண்களிடம் மும்பையில் 2 ஆண்டுகளில் ரூ.9 கோடியை இழந்த முதியவர்

முகநூலில் நட்பாக பழகிய 4 பெண்களிடம் மும்பையில் 2 ஆண்டுகளில் ரூ.9 கோடியை இழந்த முதியவர்
முகநூலில் நட்பாக பழகிய 4 பெண்களிடம் மும்பையில் 2 ஆண்டுகளில் ரூ.9 கோடியை இழந்த முதியவர்

மும்பை: ​முகநூலில் நட்​பாக பழகிய பெண்​ணிடம், மும்​பையைச் சேர்ந்த 80 வயது முதி​ய​வர் ஒரு​வர் 2 ஆண்​டு​களில் ரூ.8.7 கோடி பணத்தை இழந்​துள்​ளார். மும்​பை​யில் வசிக்​கும் 80 வயது முதி​ய​வருக்​கு, கடந்த 2023-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் முகநூலில் சார்வி என்ற பெண் நட்​பாக பழகு​வதற்கு வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

இதை ஏற்​றுக் கொண்​ட​வுடன் இரு​வரும் போன் எண்​களை பரி​மாறி வாட்ஸ் அப் மற்​றும் முகநூலில் தொடர்ந்து தகவல்​களை பரி​மாறி​யுள்​ளனர். கணவரை விட்டுப் பிரிந்து பிள்​ளை​களு​டன் வசிப்​ப​தாக சார்வி கூறி​யுள்​ளார். அதன்​பின் பிள்​ளை​களுக்கு உடல்​நிலை பாதிப்பு என கூறி முதி​ய​வரிடம் பணம் கேட்​டுள்​ளார். அவரும் அவ்​வப்​போது யுபிஐ மூலம் பணம் அனுப்பி உதவி​யுள்​ளார்.

சில நாட்​கள் கழித்து கவிதா என்ற பெயரில் ஒரு​வர் வாட்ஸ் ஆப் மூலம் முதி​ய​வரை தொடர்பு கொண்டு சார்​வி​யின் தோழி என அறி​முக​மாகி​யுள்​ளார். சில நாட்​களில் அவர் ஆபாச தகவல்​களை அனுப்பி பணம் கேட்க தொடங்​கி​யுள்​ளார். சில மாதங்​கள் கழித்து தினாஸ் என்ற பெண் சார்​வி​யின் சகோ​தரி என கூறி அறி​முக​மாகி​யுள்​ளார்.

அவர் மருத்​து​வ​மனை​யில் சார்வி இறந்து விட்​ட​தாக கூறி பணம் கேட்​டுள்​ளார். சார்​வி​யும், முதி​ய​வரும் சாட்​டிங்​கில் பகிர்ந்து கொண்ட தகவல்​களை ஸ்கிரீன் ஷாட் எடுத்து முதி​ய​வருக்கு அனுப்பி தினாஸ் பணம் பறித்​துள்​ளார். முதி​ய​வர் பணத்தை திருப்பி கேட்​ட​போது, தினாஸ் தற்​கொலை செய்​யப்​போவ​தாக மிரட்​டி​யுள்​ளார்.

அதன்​பின் ஜாஸ்​மின் என்ற பெண் முதி​ய​வரிடம் வாட்ஸ் ஆப் மூலம் சாட் செய்​யத் தொடங்​கி​யுள்​ளார். அவர் தினாஸ் தோழி என கூறி முதி​ய​வரிடம் பணம் பெற்​றுள்​ளார். கடந்த 2023-ம் ஆண்டு ஏப்​ரல் முதல் 2025 ஜனவரி வரை முதி​ய​வர் 734 பணப் பரிமாற்றங்கள் மூலம் ரூ.8.7 கோடி பணத்தை இழந்​துள்​ளார்.

அவரது சேமிப்பு முழு​வதும் தீர்ந்​த​தால், மரு​மகளிடம் ரூ.2 லட்​சம் பெற்று தன்​னிடம் தொடர்பு கொண்​ட​வர்​களுக்கு கொடுத்துள்ளார். பிறகு தனது மகனிடம் ரூ.5 லட்​சம் கடன் தரும்​படி முதி​ய​வர் கேட்​டுள்​ளார். இதனால் சந்​தேகம் அடைந்த மகன் எதற்​காக பணம் வேண்​டும் என கேட்டபோது நடந்த சம்​பவங்​களை கூறி​யுள்​ளார்.

சைபர் மோசடி​யில் சிக்கி ஏமாந்​து​விட்​டோம் என்​பதை முதி​ய​வர் அறிந்​தவுடன், அவருக்கு உடல்​நிலை பாதிப்பு ஏற்​பட்​டது. இதனால் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். அப்​போது​தான் அவருக்கு நினை​வாற்​றல் பாதிப்பு இருப்​பது தெரிய​வந்​தது. இச்​சம்​பவம் தொடர்​பாக சைபர் குற்​றப் பிரி​வில் கடந்த மாதம் 22-ம் தேதி புகார் கொடுக்​கப்​பட்​டது. இந்த வழக்கை வி​சா​ரித்து வரும் போலீ​ஸார், ஒரே பெண்​ணே, நான்கு பேரின் பெயரில் மு​தி​ய​வரை ஏமாற்​றி பணம்​ பறித்​திருக்​கலாம்​ என சந்​தேகிக்கின்றனர்​.