தேனி 68 அடியாக உயர்ந்த வைகை அணையின் நீர்மட்டம்
அணையில் நீர்வரத்து மற்றும் திறப்பை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.45 அடியாக உள்ளது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது.

முல்லை பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதாலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையினாலும் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் சீராக உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 68.14 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 1578 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 869 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 5355 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
ஏற்கனவே 66 அடியை எட்டிய போது முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 68.50 அடியில் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியை எட்டும்போது 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்படும். இதனால் அணையில் நீர்வரத்து மற்றும் திறப்பை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.45 அடியாக உள்ளது.1398 கனஅடி நீர் வருகிற நிலையில் தமிழக பகுதிக்கு 1867 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 5737 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
பெரியாறு அணை 10.4, தேக்கடி 4.6 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.


Yasmin fathima

