முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் சரிவு
முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை குறைந்ததால் அணையின் நீர்மட்டம் 136 அடியிலிருந்து சரிந்து வருகின்றது. இதனால் அணையிலிருந்து கேரளாவிற்குள் திறந்து விடப்பட்ட உபரிநீர் முழுமையாக நிறுத்தப்பட்டு 13 மதகுகளையும் மூடி வைத்துள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான இடுக்கியின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தென்மேற்கு மழையால், அணையின் நீர்மட்டம் 136 அடியை கடந்து உயர்ந்தது.
இதனால் "ரூல் கர்வ்" அட்டவணைப்படி கடந்த ஜூன் 19ம் தேதி அணையின் 13 மதகுகளும் திறக்கப்பட்டு கேரளாவிற்குள் உபரி நீர் வெளியேற்றம் 360 கன அடிவரை வெளியேற்றினார்கள்.அதன் பின்னர் மழை குறைந்து நீர்வரத்து குறைந்ததால் உபரி நீர் திறப்பும் குறைக்கப்பட்டது.
இந்நிலையில் மழை குறைந்ததால், இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 1,548 கன அடியில் இருந்து 1,094 கன அடியாக குறைந்துள்ளது.அணையின் நீர்மட்டம் 136.10 அடியிலிருந்து 135.75 அடியாக குறையத் தொடங்கியுள்ளது.
இதனால் கேரளாவிற்குள் உபரிநீர் திறப்பு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.இதையடுத்து அணையின் 13 மதகுகளையும் மூடி வைத்துள்ளனர்.
அணை நீரை வைகை அணையில் இருப்பு வைக்கும் பொருட்டு தமிழகத்திற்குள் நீர்த்திறப்பு விநாடிக்கு அதிகபட்சமாக 2,117 கன அடியாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது.அணையில் நீர் இருப்பு 6,055 மில்லியன் கன அடியா

க உள்ளது.



