"RNS தேசிய கட்சி ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் தீவிர இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு"
"RNS National Party Supported Independent Candidate Serious Final Vote Collection"
19.02.2022 ஆம் தேதி நடைபெறவிருக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் கோவை மாநகராட்சி 6ஆவது வார்டில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் சு.தமிழ்ச்செல்வன் அப்பகுதி மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
படித்த பட்டதாரியான தமிழ்ச்செல்வன் அவர்கள் அப்பகுதியில் பல சமூக சேவைகளை செய்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் 1 லட்சம் நபர்களுக்கு கபசுரக் குடிநீர் கொடுத்துள்ளார். படிக்க வசதியில்லாத குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கி உள்ளார் இது போன்ற பல சமூக சேவைகளில் ஈடுபட்டு அப்பகுதி மக்களின் நலனுக்காக பெரிதும் பாடுபட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு "ராஷ்ட்ர நிர்மான் சேனா" (RNS) தேசிய கட்சி ஆதரவு அளித்துள்ளது. அக்கட்சியின் தேசிய தலைவர் எஸ்.வி.பிள்ளை அவர்களின் ஆணைக்கிணங்க, மாநில செயல் தலைவர் மா. சீனிவாசன் அவர்களின் பரிந்துரையின் பெயரில் தேசிய செயலாளர் மணிவண்ணன், மாநில துணைத் தலைவர் டாக்டர் கதிர்வேல், மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோரின் வழிகாட்டுதளின் மூலம் மாநில மீடியா பொறுப்பாளர் காளிதாஸ், கோவை மாவட்ட தலைவர் ரமேஷ், கோவை மாவட்ட மகளிரணி தலைவி திருவேணி, கோவை மாவட்ட இளைஞரணி தலைவர் தினேஷ் பாபு, கோவை மாவட்ட மீடியா பொறுப்பாளர்கள் பாண்டிகுமார் & ரஞ்சித்குமார், கோவை மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் 6ஆவது வார்டு வைரம் சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வீடு வீடாகச் சென்று தேர்தல் வாக்குறுதி கான பிரச்சார அறிவிப்பு தாள் கொடுத்தும் மற்றும் வாகனங்களில் சென்றும் தீவிர இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு செய்தனர்.