“அனைவருக்கும் அமைதி” – நாகர்கோவில் சுப்ரீம் ரோட்டரி சங்கத்தில் சிறப்புக் கலந்துரையாடல்

“அனைவருக்கும் அமைதி” – நாகர்கோவில் சுப்ரீம் ரோட்டரி சங்கத்தில் சிறப்புக் கலந்துரையாடல்

அமைதிக்கான புதிய சிந்தனைகளை ஏற்படுத்திய சிறப்புக் கலந்துரையாடல்

நாகர்கோவில் சுப்ரீம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை (07.08.2026) நடைபெற்ற வாராந்திர கூட்டத்தில் “அனைவருக்கும் அமைதி” என்ற தலைப்பில் சிறப்புக் கலந்துரையாடல் நடைபெற்றது. நிகழ்வுக்கு சங்கத் தலைவர் ரோட்டேரியன் பேராசிரியர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக தென் கொரியாவைச் சேர்ந்த பெண்கள் அமைதிக்கான உலகளாவிய அமைப்பின் மண்டல இயக்குநர் ஏலேனா பார்க் கலந்து கொண்டு, உலக அமைதி, பெண்களின் பங்கு, சமூக நல்லிணக்கம் மற்றும் நாடுகளுக்கிடையேயான நட்புறவு குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

பல்வேறு நாடுகள் மற்றும் சமூகங்களுக்கிடையே புரிதல், அன்பு, ஒற்றுமை ஆகியவற்றை வளர்ப்பதன் மூலம் நிலையான அமைதியை உருவாக்க முடியும் என்றும், அமைதிக்கான முயற்சிகளில் பெண்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், இந்தியா–தென் கொரியா நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் நடைபெற்ற இக்கலந்துரையாடல், உலக அமைதி குறித்த புதிய சிந்தனைகளையும், உலகளாவிய சகோதரத்துவ உணர்வையும் ஏற்படுத்தியது. “அமைதி என்பது ஒவ்வொருவரின் பொறுப்பு” என்ற கருத்தை வலியுறுத்தி நிகழ்வு சிறப்பாக நிறைவுற்றது.