Magalir Urimai Thogai : ஜூலை 7 முதல் வீடுதேடி வரும் விண்ணப்பம் : மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன?

Magalir Urimai Thogai : ஜூலை 7 முதல் வீடுதேடி வரும் விண்ணப்பம் : மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன?
ஜூலை 15 முதல் நவம்பர் வரை அனைத்து மாவட்டங்களில் 10 ஆயிரம் 'உங்களுடன் ஸ்டாலின்'

Kalaingar Magalir Urimai Thogai : ஜூலை 15 முதல் நவம்பர் வரை அனைத்து மாவட்டங்களில் 10 ஆயிரம் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதன்மை முகாம் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தொடங்கப்படும்.

ஜூலை 15 முதல் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் முகாம்கள் தொடங்கப்பட உள்ள நிலையில் அதற்கான விண்ணப்பங்கள் திங்கட்கிழமை முதல் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாமினை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வரும் 15ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் 10 ஆயிரம் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது

.மேலும், இத்திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று, முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்படவுள்ள திட்டம், சேவைகள் மற்றும் அதற்கான விண்ணப்பங்களையும் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர்கள் இந்த முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம் என்றும் அதற்கான விண்ணப்பங்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது