சின்னதாக மாற்றி யோசித்த இளைஞர்.. இப்போ 45 வயதில் வேலை இல்லை.. ஆனாலும் பேங்க் அகவுண்டில் ரூ.4.5 கோடி

சின்னதாக மாற்றி யோசித்த இளைஞர்.. இப்போ 45 வயதில் வேலை இல்லை.. ஆனாலும் பேங்க் அகவுண்டில் ரூ.4.5 கோடி
வருமானம் பத்தாமல் புலம்பும் பலரை நாம் பார்த்து இருப்போம்...

மும்பை: வருமானம் பத்தாமல் புலம்பும் பலரை நாம் பார்த்து இருப்போம். ஆனால், இங்கு ஒருவர் சத்தமே இல்லாமல் ரூ.4.5 கோடி சேர்த்து இருக்கிறார். அதுவும் அவர் தொழில் எதையும் செய்யவில்லை.. 2, 3 வேலைகளை செய்யவில்லை.. ஒரே வேலை செய்தே மிடில் கிளாஸ் இளைஞர் இந்த தொகையை சேர்த்திருக்கிறார். அவர் சின்னதாக மாற்றிய யோசித்த ஒரு விஷயமே இந்தளவுக்கு பணம் சேர்க்க உதவியிருக்கிறது...

இந்த காலத்திலும் சரி, இதற்கு முன்பு நமது பெற்றோர் காலத்திலும் சரி காலம் முழுக்க வேலை செய்தாலும் கடைசி காலத்தில் பணத்திற்கு யாரையாவது நம்பி இருக்கும் சூழலே பெரும்பாலானோருக்கு இருக்கும். குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு மட்டுமின்றி மிடில் கிளாஸ் மக்களும் கூட இதே பிரச்சினையை தான் எதிர்கொள்வார்கள்...

ஆனால், இங்கு ஒருவர் ஒரே ஒரு சின்ன விஷயத்தை முன்கூட்டியே கண்டறிந்து, எல்லாரையும் விட மாற்றி யோசித்து இருக்கிறார். இதன் மூலம் அவருக்கு 45 வயதிலேயே பெரிய தொகை வந்துவிட்டது. மற்றவர்கள் 60 வயது வரை படாதபாடு பட்டு வேலை செய்யும் நிலையில், இவர் 45 வயதிலேயே ஜாலியாக ஓய்வு பெற்றுவிட்டார். யார் இவர்.. அப்படி என்ன மாற்றி யோசித்தார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்...

ரெட்டிட் யூசர் ஒருவர் தான் இதை தனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதாவது அவருடைய மாமா வெறும் 45 வயதில் ரூ.4.7 கோடி சேமித்து ஓய்வும் பெற்றுவிட்டாராம். அதுவும் அவர் எந்தவொரு பிஸ்னஸும் செய்யவில்லை. டிரேடிங்கும் செய்யவில்லையாம்.. சாதாரணமான வேலையில் போதுமான வருமானத்தை மட்டுமே ஈட்டி இருக்கிறார். அப்படியிருக்கும்போது எப்படி இவ்வளவு பெரிய தொகையை சேர்க்க முடியும் என்ற சந்தேகம் நமக்கு வரும்.

சாதாரண மிடில் கிளாஸ்

அதற்கான பதிலையும் அந்த ரெட்டிட் யூசரே கொடுத்துள்ளார். அவரது மாமா 30 வருடங்களாக ஒரே 2BHK வீட்டில் வசித்து வந்தார்.. ஒரே ஸ்கூட்டரில் பயணம் செய்திருக்கிறார். ஒரே ஒரு முறை கேரளாவிற்கு சுற்றுலா சென்றார். அவர் வேறு கூடுதலாக எந்தவொரு வேலையும் செய்யவில்லை என்றாலும் அதேநேரம் அவர் ஒருபோதும் ஆடம்பரத்தை விரும்பவில்லையாம். சம்பள உயர்வு பெற்றாலும் செலவு முறைகளை அவர் மாற்றவில்லை..

அந்த ரெட்டிட் யூசர் மேலும் கூறுகையில், "நான் 24 வயதில் சம்பளம் குறைவாக இருப்பதாக மாமாவிடம் சொன்னேன். அதற்கு அவர் சொன்ன பதிலை கேட்டு வியந்து போனேன். சம்பளம் குறித்து சொன்னதற்கு அவர் 'நீ அதிகமாக சம்பாதிக்கத் தேவையில்லை. சீக்கிரம் சேமிப்பை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இதுதான அவருக்கும் கை கொடுத்தது" என்று அந்த ரெட்டிட் யூசர் கூறியிருக்கிறார்.

மாற்றிய யோசித்தார்

அவரது மாமா 1998ம் ஆண்டிலேயே ஒரு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யத் தொடங்கினார். அந்தச் சமயத்தில் எல்லாம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் அவ்வளவு பிரபலமாக இருக்கவில்லை. பெரும்பாலானோருக்கு மியூச்சுவல் ஃபண்ட் என்றே தெரியாது. தெரிந்தாலும் அவர்களுக்கு பயம் இருந்திருக்கும். ஆனால், சின்னதாக மாற்றி யோசித்த அவரது மாமா இந்த மியூச்சுவல் ஃபண்ட்களில் நம்பி முதலீடு செய்தார்...

சின்ன முதலீடு

அதுவும் கூட பெரிய தொகையை எல்லாம் முதலீடு செய்யவில்லையாம். தொடக்கத்தில் அவர் மாதம் வெறும் ரூ.500 மட்டுமே சிப் முதலீடு செய்தார். அதேநேரம் சம்பளம் உயரும்போதெல்லாம், முதலீட்டுத் தொகையையும் அதிகரித்தார். ரூ.1,000, பிறகு ரூ.2,000, பின்னர் ரூ.5,000 என மெலல் சம்பளத்தை உயர்த்தி கொண்டே வந்திருக்கிறார். 2010ல் அவர் மாதம் ரூ.20,000 முதலீடு செய்து வந்தார். எவ்வளவு சிக்கல் வந்தாலும் மாதாமாதம் முதலீடு செய்வதை அவர் நிறுத்தவே இல்லை. அதுவே அவரை இப்போது 47 வயதிலேயே ஓய்வு பெற வைத்திருக்கிறது..

தொடக்கத்தில் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தாலும் இப்போது தனது மனைவியுடன் ஒவ்வொரு வீக் எண்டிலும் வெளியே செல்கிறார். ஆனால், இப்போதும் அவரது குழந்தைகளுக்கு அவரது சொத்து மதிப்பு பற்றி எதுவும் தெரியாதாம். அதாவது இப்போது வாழ்க்கையை என்ஜாய் செய்தாலும் இன்னும் ஆடம்பர செலவுகளை தவிர்த்தே வருவதாக அந்த ரெட்டிட் யூசர் குறிப்பிட்டுள்ளது.

நெட்டிசன்கள்

அவரது போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை கூறி வருகிறார்கள். ஒரு தரப்பினர் அவர் செய்ததே மிக சரியான விஷயம் என்றும் இப்போது சேமித்தால் தான் கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ முடியும் என கூறி வருகிறார்கள். அதேநேரம் மற்றொரு தரப்பினர், "சேமிப்பு நல்லது தான்.. ஆனாலும், இளமையில் வாழ்க்கையை கொஞ்சமாவது அனுபவிக்க வேண்டு்ம. 45 வயதில் செல்வத்தை அனுபவிக்க சக்தியும், மன உறுதியும் இருக்குமா என்று தெரியவில்லை" என்று கூறி வருகிறார்கள்...