Guindy ITI Admission: இங்க படிச்சி முடிச்சா வேலை உறுதி - கிண்டி ஐடிஐ-ல் சேர, இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Guindy ITI Admission: இங்க படிச்சி முடிச்சா வேலை உறுதி - கிண்டி ஐடிஐ-ல் சேர, இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
Guindy ITI Admission: இங்க படிச்சி முடிச்சா வேலை உறுதி - கிண்டி

தொழிற்பயிற்சி மூலம் வேலைவாய்ப்பு பெற விரும்பும் பள்ளி மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்பு காத்திருக்கிறது. சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ITI) 2024-25 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை ஜூலை 31-க்குள் நேரில் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்

இந்த ஐடிஐயில் தற்போது Desktop Publishing Operator, Digital Photographer, Fitter, Food Production (General), Food and Beverage Service Assistant, மற்றும் Smartphone Technician ஆகிய தொழிற்பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் சேர விரும்பும் மாணவர்கள் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வழியாக பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதில், இலவச பயிற்சி, சீருடை, மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை மற்றும் 'புதுமைப் பெண்' மற்றும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டம் வழியாக கூடுதலாக ரூ.1,000 வழங்கப்படும். மேலும், தொழிற்துறையுடன் தொடர்புடைய வரைபடக் கருவிகள் மற்றும் பாடப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன

பயிற்சி முடிவில் மாணவர்களுக்கு மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இது, அரசு மற்றும் தனியார் துறையில் வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளை பெரிதும் வழங்கும்.

விருப்பமுள்ள மாணவர்கள், கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு, 044 - 22501350 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

.