சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரூ.338 கோடியில் மழைக்கால முன்னெச்சரிக்கை பணி: அதிகாரிகளுக்கு துணை முதல்வர் அறிவுறுத்தல்

சென்னை: வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதை அடுத்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் அவர் பேசிய தாவது: கடந்த சில ஆண்டுகளாகவே பருவமழைக் காலங்களில் சென்னை அதிகமான மழையை எதிர்கொண்டு வருகிறது. இதில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஓட்டேரி நல்லா கால்வாய், வீரங்கல் ஓடை மற்றும் விருகம்பாக்கம் கால்வாய் ஆகியவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, அந்த கால்வாய்களின் நீர்வழிப்பாதைகள் ரூ.95 கோடியில் மேம்படுத்தப்பட்டு வரு கின்றன. அதேபோல் செங்குன்றம் அருகேயுள்ள சாலைகளில் மாநில பேரிடர் மேலாண்மை நிதியின் மூலம் ரூ.23.12 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது.

சென்னையின் 18 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்குவதைத் தவிர்க்க ரூ.15 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொருக்குப்பேட்டை போஜராஜன் நகர் பகுதியில் ரூ.30.13 கோடி மதிப்பீட்டில் வாகன சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்றுள் ளது. வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே ரூ.2.50 கோடியில் ரயில் பாதையின் குறுக்கே கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.