ஆடி அமாவாசை ஸ்பெஷல்... மிக குறைந்த கட்டணத்தில் ஆன்மீக சுற்றுலா

ஆடி அமாவாசை ஸ்பெஷல்... மிக குறைந்த கட்டணத்தில் ஆன்மீக சுற்றுலா
ஆடி அமாவாசை ஸ்பெஷல்... மிக குறைந்த கட்டணத்தில் ஆன்மீக சுற்றுலா திட்டம் அறிவித்த தமிழக அரசு ..!!

தமிழக சுற்றுலா துறையின் சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு ஆடி அமாவாசை முன்னிட்டு குறைந்த கட்டணத்தில் ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோவில் பாவங்களை நீக்கும் புண்ணிய ஸ்தலம் என்பதால் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பது ஐதீகமாக பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் அமாவாசை நாட்கள் மற்றும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை போன்ற முக்கிய அமாவாசை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டுச் செல்வார்கள்.

இந்நிலையில், தமிழக சுற்றுலா துறையின் சார்பில் ஆடி அமாவாசை முன்னிட்டு மூன்று நாட்கள் ராமேஸ்வரத்திற்கு ரூ.6500 கட்டணத்தில் ஆன்மீக சுற்றுலா திட்டம் அறிவித்துள்ளது. இதில் மூன்று நாட்கள் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில், ராமர்பாதம், தனுஷ்கோடி, போன்ற இடங்களுக்கு சென்று பூஜைகள், அக்னி தீர்த்தம் கடற்கரையில் பித்ரு பூஜை செய்யப்படும்.

மேலும், மூன்று நாட்களுக்கு மதிய உணவு மட்டும் இலவசமாக வழங்கப்படும். www.ttdcoonline.com என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் சந்தேகம் இருப்பின் 1800 4253 1111 எண்ணை தொடர்பு கொள்ளவும் என சுற்றுலா துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது