கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : இந்த 4 ஆவணங்கள் கட்டாயம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்துக்கு புதியதாக விண்ணப்பிப்பவர்கள் என்னென்ன ஆவணங்கள் கட்டாயம் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பட்டியலிட்டுள்ளது. அதில் அடிப்படையாக நான்கு ஆவணங்கள் எல்லோரிடமும் இருக்க வேண்டும். அவை யாவை என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடங்கிவிட்டது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். இதுவரை விண்ணப்பிக்கா தகுதியான பெண்கள் எல்லோரும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள தகுதியான பெண்கள் எல்லோரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க தொடங்கிவிட்டனர். அப்படி விண்ணபிக்க உள்ள பெண்கள் கட்டாயம் நான்கு ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்
ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கி பாஸ்புக், மின் கட்டண ரசீது ஆகிய ஆவணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது



Yasmin fathima

