காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த ரத யாத்திரைக்கு திருச்சி தொட்டியத்தில் வரவேற்பு
திருச்சி தொட்டியத்தில் வரவேற்பு
அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை இணைந்து நடத்தும் 14-ஆம் ஆண்டு காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த ரத யாத்திரை இந்த ஆண்டு தலைக்காவிரியான குடகு மலையில் இருந்து தொடங்கி பல மாவட்டங்களின் வழியாக திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதிக்கு வருகை தந்த போது விவசாய சங்க தலைவர் தியாகராஜன் பிள்ளை, வணிகர் சங்கங்கத்தின் மாநில துணைத் தலைவர் செல்வராஜ், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் திருஞானம், ஆசிரியர் பார்த்தசாரதி, விவசாய சங்க துணை செயலாளர் மயில் வாகனம், மணி குட்டி ஐயர், வக்கீல் அம்பிகாபதி ஆகியோர் தலைமையில் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்த ரத யாத்திரையில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கத்தின் நிறுவனர் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவருமான தவத்திரு.சுவாமி ராமானந்தா மகாராஜ் அவர்கள் தலைமையில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கத்தின் இணை செயலாளர் சிவராமானந்தபுரி, தவத்திரு.சுவாமி ஆதித்யானந்தா சரஸ்வதி, கடலூர் சுவாமி மேகானந்தா சரஸ்வதி மாதா ஜி.ஶ்ரீ வித்யாம்பா சரஸ்வதி , சுவாமி கோரக்ஸானந்த சரஸ்வதி, உட்பட 25-க்கும் மேற்பட்ட சந்நியாசிகள் வந்திருந்தனர். வட மாநிலங்களில் கங்கை,யமுனை போன்ற அனைத்து நதிகளும் புனிதமாக வணங்கி பாதுகாக்கப்படுகிறது. அதே போல நாமும் நமது அன்னை காவிரியில் தொழிற்சாலை கழிவுநீர், பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகள் கலக்காமல் பாதுகாத்திட வேண்டும்.மேலும் காவிரி நதிநீரை அனைவருக்கும் வணங்கி ஆரத்தி எடுத்து வழிபட வேண்டும்.
காவிரி நதியின் கரையின் இருபுறமும் நாட்டு மரங்களை நட்டு கரைகளை வலுப்படுத்த வேண்டும் என மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் பற்றி சந்நியாசிகள் மூலம் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளையின் கோரிக்கையினை ஏற்று மத்திய அரசு காவிரி, தாமிரபரணி, நொய்யல் உள்ளிட்ட நதிகளின் தூய்மை, பாதுகாப்பிற்காக சுமார் 2000 கோடி நிதியினை ஒதுக்கி உள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியினை சந்நியாசிகள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து இந்த காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த ரத யாத்திரைக்கு இந்த பகுதியில் சிறப்பாக வரவேற்பு மற்றும் வழிபாடு, காவிரி நதியின் தூய்மை மற்றும் பாதுகாப்பிற்காக சேவை செய்து வருகின்ற நபர்களுக்கு அவர்களின் சேவையினை பாராட்டி, ஊக்குவிக்கும் விதமாக விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.மேலும் இந்த நிகழ்ச்சியில் திருச்சி பெட்டவாய்தலை மாணிக்கவேல் , பாலகிருஷ்ணன் , குளித்தலை மஹாவிஷ்ணு , ஶ்ரீ பாலசமுத்திரம் ஓமாந்தூரான் , தொட்டியம் பாஜக மகாராஜன் , தொட்டியபட்டி மணி, கவுன்சிலர் ரவி, முன்னாள் கவுன்சிலர் மோகன்,மருதை , சீனிவாசன், பன்னீர் செல்வம் , உட்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியினை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை இணைச் செயலாளர் அருள்வேலன் ஜி ஒருங்கிணைத்தார்.